வவுனியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த யுவதி
Sri Lanka Police
Vavuniya
Sri Lanka
By Shalini Balachandran
வவுனியா சமனங்குளம் பகுதியில் இருந்து 23 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த குறித்த யுவதி அப்பகுதியிலுள்ள வீடொன்றில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் யுவதியின் சடலத்தை மீட்டுள்ளனர்.
யுவதியின் சடலம்
சடலமாக மீட்கப்பட்ட யுவதி ஆசிகுளம், சிதம்பரநகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய கவிப்பிரியா என்பவராவார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்