23 வயதுடைய மனைவியை படுகொலை செய்த கணவன் கைது!
Colombo
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
கொழும்பு - கெஸ்பேவ காவல்துறை பிரிவில் மடபாத பகுதியில் பெண்ணொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது, நேற்று(13) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதால், அந்த நபர் அப்பெண்ணைக் கூர்மையான ஆயுதத்தால் குத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது, பொல்ஹேன பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணொருவரே கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், கொல்லப்பட்ட பெண்ணின் சடலம் கலுபோவில வைத்தியசாலை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சந்தேநபரான கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கெஸ்பேவ காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 2 மணி நேரம் முன்
அம்பாறையை அதிரச் செய்த திராய்க்கேணி இனப்படுகொலை!
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி