பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கடந்த பெப்ரவரி மாதத்தில் 232,341 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (Sri Lanka Tourism Development Authority) தெரிவித்துள்ளது.
அந்தவகையில் இந்தியா, ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, பிரான்ஸ், ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள்
குறித்த சுற்றுலாப் பயணிகளில் 34,006 பேர் இந்தியாவிலிருந்து (India) வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ரஷ்யாவில் இருந்து 29,241 பேரும், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 24,830 பேரும், ஜேர்மனியில் இருந்து 16,720 பேரும், பிரான்சில் இருந்து 15,063 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 485,102 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        