குழந்தைகளைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் : இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட பெண்குழந்தை (காணொளி)
காசாவில் (Gaza) இஸ்ரேல் (Israel) மேற்கொண்ட தாக்குதலில் உயிர்பிழைத்த 25 நாள் பெண்குழந்தையை மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளின் மத்தியிலிருந்து மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 நாள் பெண் குழந்தை
கான்யூனிசின் வீடொன்றின் இடிபாடுகளில் இருந்து மீட்பு பணியாளர்கள் 25 நாள் பெண் குழந்தையை உயிருடன் மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை,கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் போர் நிறுத்தத்தை முறியடித்ததில் இருந்து, 200 குழந்தைகள் உட்பட 506 காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 909 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை முதல், போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் குறைந்தது 110 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்