அரிசி மூடைகளில் 25 கிலோ ஹெரோயின்..! இருவர் கைது
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
கைது
அம்பலாந்தோட்டை, கொக்கல்ல பிரதேசத்தில் வீடொன்றில் அரிசி மூடைகளில் இருந்து 25 கிலோ ஹெரோயினுடன் இரு சந்தேகநபர்கள் இன்று (3) கைது செய்யப்பட்டதாக அம்பலாந்தோட்டை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த ஹெரோயின் கையிருப்பின் பெறுமதி சுமார் 30 கோடி ரூபா என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அம்பலாந்தோட்டை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் விசேட காவல்துறை குழுவொன்று சுற்றிவளைத்து குறித்த ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் .இருவரையும் கைது செய்துள்ளது.
மேலதிக விசாரணை

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி