நீர்கொழும்பு சிறையில் காயமடைந்தோர் எண்ணிக்கை 100ஆக அதிகரிப்பு!

Sri Lanka Police STF Negombo Prisons in Sri Lanka
By Sathangani Jul 06, 2026 11:04 AM GMT
Report

புதிய இணைப்பு

நீர்கொழும்பு சிறையில் மீண்டும் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக காயமடைந்தோர் எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளது.

மேலும்  மோதலில் காயமடைந்து நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு சிறை அதிகாரி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. கைதிகள் உட்பட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை இருபத்தாறு ஆகும்.

இலங்கை இராணுவம், காவல்துறை சிறப்பு அதிரடிப்படை மற்றும் காவல்துறை கலவரத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த ஏராளமான அதிகாரிகள் தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நுழைந்துள்ளனர்.

[நீர்கொழும்பு சிறையில் காயமடைந்தோர் எண்ணிக்கை 100ஆக அதிகரிப்பு! | 25 Killed Today S Violence At Negombo Prison]

இந்த பதற்றமான சூழ்நிலை நேற்று (05) காலை தொடங்கி மாலையில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதன் விளைவாக, இன்று (06) இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு

UPDATE நீர்கொழும்பு சிறையில் துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள் : 25 பேர் பலி! 13 பேர் கவலைக்கிடம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 25 பேரில், 5 சிறைச்சாலை அதிகாரிகளும் 20 கைதிகளும் அடங்குவதாக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் புஷ்பா கம்லத் தெரிவித்துள்ளார்.

இந்த மோதல் காரணமாக சுமார் 100 பேர் காயமடைந்து நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் பலத்த காயமடைந்த 13 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இன்று காலை நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்ட போது கைதிகள் சிறையின் பிரதான வாயில் வழியாக வெளியேற முயற்சித்தனர்.

மோதல் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினருடன் விசேட அதிரடிப்படையினரும் களமிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 4 சிறை அதிகாரிகள், மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது மருத்துவமனையிலிருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்த அதிகாரிகளின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, விசேட மருத்துவ சிகிச்சை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

முதலாம் இணைப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகள் ஐந்து பேரும், கைதிகள் 20 பேரும் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு மருத்துவமனையின் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில், நீர்கொழும்பு சிறையிலிருந்து மீண்டும் துப்பாக்கிச் சத்தம் கேட்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரத்தக்களரியாக மாறிய நீர்கொழும்பு சிறை! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

இரத்தக்களரியாக மாறிய நீர்கொழும்பு சிறை! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

 உறவினர்கள் கோரிக்கை 

அத்துடன் இந்த மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு சிறையில் காயமடைந்தோர் எண்ணிக்கை 100ஆக அதிகரிப்பு! | 25 Killed Today S Violence At Negombo Prison

இதற்கிடையில், சிறைக்கு வெளியே கூடியுள்ள கைதிகளின் உறவினர்கள், அவர்களை வெளியே அழைத்து வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று இடம்பெற்று வரும் மோதலை கருத்திற்கொண்டு மேலதிக பாதுகாப்பிற்காக இலங்கை இராணுவ வீரர்கள் சிறைச்சாலை வளாகத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இரத்தக்களரியாக மாறிய நீர்கொழும்பு சிறை! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

இரத்தக்களரியாக மாறிய நீர்கொழும்பு சிறை! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரம் : விசேட விசாரணைக் குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரம் : விசேட விசாரணைக் குழு நியமனம்

முன்னாள் ஜனாதிபதி குறித்து சிஐடியின் 4ஆம் மாடி விசாரணை! சர்ச்சையை கிளப்பிய தகவல்

முன்னாள் ஜனாதிபதி குறித்து சிஐடியின் 4ஆம் மாடி விசாரணை! சர்ச்சையை கிளப்பிய தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026