2500 ஆங்கில ஆசிரியர்களை உடன் நியமிக்க உத்தரவு
இலங்கையில் மாணவர்களின் ஆங்கில கல்வியை மேம்படுத்தும் வகையில் 2500 ஆங்கில ஆசிரியர்களை உடனடியாக நியமிக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை குறித்த நேற்றைய அமைச்சரவை துணைக் குழுக் கூட்டத்தில் அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.
1,000 ஓய்வுபெற்ற ஆசிரியர்களை விரைந்து பணியமர்த்த
இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆங்கில வழியில் பாடங்களைக் கற்பிக்கும் தகுதியுள்ள 1,000 ஓய்வுபெற்ற ஆசிரியர்களை விரைந்து பணியமர்த்த அறிவுறுத்தப்பட்டது.
கூடுதலாக, ஆங்கில வழியில் கற்பிப்பதில் திறமையான 1,100 பட்டதாரிகளை திறந்த போட்டி பரீட்சை மூலம் பணியமர்த்துவதும் இந்த உத்தரவில் அடங்கும்.
மேலும் 400 கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களும் சேர்க்கப்படவுள்ளனர்.
மாணவர்களுக்கான விடுகை சான்றிதழ்
அத்துடன் கனிஷ்டஇடைநிலைக் கல்வி மற்றும் சிரேஷ்ட இடைநிலைக் கல்வியை முடித்த மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் பாடசாலை விடுகைச் சான்றிதழுடன் கூடுதலாக, மாணவர்கள் பல ஆண்டுகளாக பாடசாலைகளில் வெளிப்படுத்திய பல்வேறு திறமைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பாடங்களைக் காட்டும் எந்த தரச் சான்றிதழும் வழங்கப்படுவதில்லை.
அதன்படி, இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தேசியப் பரீட்சைகளின் பெறுபேறுகளைக் காட்டும் சான்றிதழ்கள் மட்டுப்படுத்தப்படாமல், ஒவ்வொரு மாணவருக்கும் நிறைவுச் சான்றிதழை வழங்குவதற்கான கொள்கைத் தீர்மானம் எட்டப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |