நாளையுடன் நிவாரணப் பணிகளை முடிக்க இலக்கு: வெளியான அறிவிப்பு
டித்வா புயலினால் பாதிக்கப்பட்டு 25,000 ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளத் தகுதிபெற்ற குடும்பங்களில் 87 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் கொடுப்பனவு வழங்கும் பணிகளில் சிலவற்றை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கொடுப்பனவுகள்
குறித்த கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளத் தகுதிபெற்ற 450,225 குடும்பங்களில் 87.4 வீதம் சதவீதமானோருக்கு தற்போது கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படும் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளத் தகுதிபெற்ற 216,142 மாணவர்களில் 14.9 வீதம் சதவீதமானோருக்கும் தற்போது கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |