கடவுச்சீட்டுக்காக காத்திருக்கும் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் : வெளியான தகவல்
26,000 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்காக விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அருண் ஹேமச்சந்திர (Arun Hemachandra) தெரிவித்துள்ளார்.
இந்த விண்ணப்பங்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களால் பெறப்பட்டு சுமார் இரண்டு வருடங்கள் கடந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு கடவுச்சீட்டுகள்
அத்துடன் சிலரின் வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் காலாவதியாகிவிட்டதால், அவர்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்வதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வை வழங்குவதற்காக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு (Ministry of Foreign Affairs), மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் (Department of Immigration and Emigration) இடையே கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
எனினும், இந்த மாத இறுதிக்குள் இந்தப் பிரச்சினையை முடிந்தவரை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறிய பிரதி அமைச்சர், தற்போதைய அரசாங்கம் இந்த நெருக்கடியை உருவாக்கவில்லை என்பதை வலியுறுத்தினார்.
இதேவேளை, வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெறுகின்ற போதிலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்களிலும் இடைத்தரகர்களின் உதவியை நாட வேண்டாம் என்று அருண் ஹேமச்சந்திர பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்