நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிரடி சுற்றிவளைப்புகள்: இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு
ஜனவரி முதல் தற்போது வரை சந்தையில் சுமார் 22,000 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், சுமார் 21,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, இவ்வருடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் மூலம் 26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வழக்கு தாக்கல்
குறித்த வழக்குகளின் படி, நீதிமன்றங்கள் அபராதமாக இருபத்தி ஆறு கோடியே எழுபத்தாறு லட்சத்து முப்பதாயிரத்து நானூற்று நாற்பத்து எட்டு ரூபாவை வசூலித்துள்ளன.
அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், இருப்புக்களை மறைத்து வைத்தல், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், விலைகளை காட்சிப்படுத்தாமை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக உரிய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சோதனைகள்
இதற்கிடையில், பண்டிகைக் காலத்தை இலக்காகக் கொண்ட சிறப்புத் திட்டத்தின் கீழ் 1,185 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த சோதனை நடவடிக்கைகள் அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.