அரசியல் கைதிகள் 27பேர் தொடர்பில் யாழில் வைத்து நீதி அமைச்சர் வழங்கிய உறுதி
Prevention of Terrorism Act
Ali Sabry
Prison
Terrorism
SriLanka
By Chanakyan
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டோர் (அரசியல் கைதிகள்) 27 பேர் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பிலான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் தற்போது திருத்தப்படுகின்றது. எதிர்காலத்தில் அதனை முழுமையாக மாற்றியமைக்கும் திட்டமும் இருக்கின்றது என்றும் அத்துடன் அரசியல் கைதிகள் என்று சட்டத்தின் அடிப்படையில் எவரும் இல்லை. அவர்கள் அனைவரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
