மகிந்தவிற்காக தமிழ் எம்.பிக்களை கடத்திய கருணா-பிள்ளையான்: அம்பலமான உண்மைகள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) ஆட்சிகாலத்தில்தான் உலக வரலாற்றில் மூன்று தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டுகொல்லப்பட்டனர் என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் (P. Ariyanethiran) தெரிவித்துள்ளார்.
இதன் பின்னணியில் முன்னாள் கருணா-பிள்ளையான் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “2006 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் இருந்து விலகுவதாக 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்சவிற்கு எச்சரிக்கையொன்றை விடுத்திருந்தனர்.
வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றவில்லை என்றால் நாடாளுமன்றம் களையும் என்ற அடிப்படையில், அதில் தமிழ் தேசிய கூட்டணியில் இருந்த 22 உறுப்பினர்களில் சிலரை தமக்கு ஆதரவாக எடுக்க மகிந்த ராஜபக்ச தரப்பு முயற்சித்தது.
இருப்பினும், அது சரி வராத காரணத்தினால் அதில் சிலர் கடத்தப்பட்டு கருணாவின் (Karuna Amman) பெயரில் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், கடத்தல்காரர்களின் தரப்பில் பிள்ளையானின் (Pillayan) பெயரே தெரிவிக்கப்பட்டது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் தரப்பு அரசியல், தென்னிலங்கை தரப்பு அரசியல், நாட்டின் அரசியல் தலைமைகளின் தற்போதைய நகர்வுகள் மற்றும் பலதரப்பட்ட அரசியல்சார் விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
