மாதாந்த பயணச் சீட்டுகளை வழங்குவதற்கான அரசாங்கத்தின் மானியமாக 28 பில்லியன் தேவை : பந்துல குணவர்தன
2022-2023 ஆம் ஆண்டுக்கான மாதாந்த பயணச் சீட்டுகளை வழங்குவதற்கான அரசாங்கத்தின் மானியமாக 28 பில்லியன் ரூபா திறைசேரியிலிருந்து பெறப்பட வேண்டுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (12) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்.
“பாடசாலை மாணவர்களின் பருவச் சீட்டு செலவில் 7 சதவீதத்தை பெற்றோர்கள் ஏற்கின்றனர், மீதமுள்ள 93 சதவீதத்தை அரசு மானியமாக ஏற்கிறது.
போக்குவரத்து சபை
அத்துடன், தொழிற்சாலை மின்சாரம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் பருவச் சீட்டுக்கான செலவில் 79 சதவீதத்தை அரசே ஏற்கும்.
இவ்வாறு வழங்கப்படும் மானியங்களுக்கு 2022 ஆம் ஆண்டு 7688 மில்லியன் ரூபாவும் 2023 ஆம் ஆண்டு 12136 பில்லியன் ரூபாவும் திறைசேரியில் இருந்து போக்குவரத்து சபைக்கு கிடைக்க வேண்டும்.
மேலும், 2024 ஆம் ஆண்டில் மானியங்களை வழங்க மேலும் 8500 மில்லியன் தேவை.
பருவச் சீட்டு
ஜனவரி மாதத்தில் ஒரு நாள் கூட பாடசாலை இல்லாத காரணத்தினால் சுற்று நிருபங்களுக்கு அமைய பருவச் சீட்டுகளை வழங்க முடியாது.
ஆனால் உயர்தரம் மற்றும் 11ஆம் வகுப்புக்கான பருவச் சீட்டுகள் அத்தியாவசியத் தேவைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டு அடுத்த மாதம் முதல் வழக்கம் போல் அனைத்து மாணவர்களுக்கும் பருவச் சீட்டு வழங்கப்படும்.
அதேவேளை, போக்குவரத்துச் சபையை இயக்குவதற்கு 28 பில்லியன் ரூபா நிதியொதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.” எனவும் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |