தரமற்ற மருந்து இறக்குமதி விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக முறைப்பாடு
தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யுமாறு கோரி முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று(12) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சமர்ப்பித்துள்ளது.
அதன்போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, இந்த சம்பவத்தின் மூளையாக முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தான் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கைது நடவடிக்கை
அத்தோடு, தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் தடுப்பூசிகளை விநியோகித்த நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் மருத்துவ வழங்கல் திணைக்கள அதிகாரிகள் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே, இந்த விவகாரம் தொடர்பில், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் கைது செய்யப்பட வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |