இணையவழி கடன் மோசடி : புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ள ஷெஹான் சேமசிங்க
இலங்கையில் மேற்கொள்ளப்படும் இணையவழி கடன் மோசடிகளுக்கு எதிராக புதிய அதிகாரங்களுடனான சட்டமொன்று விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இணையவழி கடன் மோசடி தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் இணையவழி மூலம் கடன் வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சட்ட நடவடிக்கை
இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. நிதி அமைச்சு, மத்திய வங்கி மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஆதரவுடன் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மத்திய ஆபிரிக்க குடியரசில் விபத்துக்குள்ளான இலங்கையின் உலங்குவானூர்தி : விசாரணைகளுக்காக நியமிக்கப்பட் குழு
இலங்கை நிகர நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை சட்டமூலம் எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
ஆனால் இணையவழி கடன் போன்ற விடயங்களை சட்டமூலத்தில் முழுமையாக உள்ளடக்க முடியாது.
இது ஒரு பாரிய ஆபத்தான நிலை என்பதை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட வேண்டும்.
இணையவழி கடன் வழங்குநர்கள்
இணையவழி கடன் வழங்குநர்களுக்கான உரிமத்தை வழங்குவதற்கான சரியான செயல்முறை தற்போது இலங்கையில் இல்லை.
இதற்கான செயல்முறையொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும். மிக குறுகிய காலத்துக்குள் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |