பொது பாதுகாப்பு அமைச்சிற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்துள்ள அறிவித்தல்
தொடர் ஈஸ்டர் தாக்குதல்களை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் கடமை தவறியதாக குற்றப்பத்திரிகையை வழங்கிய அதிகாரி தொடர்பில் ஒரு தரப்பினர் தகவல் கோரியபோது, தங்கள் திணைக்களத்திடம் தகவல் இல்லை என தெரிவித்தமை தொடர்பான உண்மைகளை எதிர்வரும் பெப்ரவரி 13ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (11) அறிவித்தல் விடுத்துள்ளது.
சமூக மற்றும் சமாதான நிலையத்தின் சார்பில் ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டி. என். சமரகோன் மேற்படி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
பின்னணி
பொது பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றிய சரத் வீரசேகர, 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தமது பொறுப்பை புறக்கணித்த காவல்துறை உத்தியோகத்தர்கள் குழுவிற்கு எதிராக பொது சேவை ஆணைக்குழு குற்றப்பத்திரிகையை அனுப்பியுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதன்படி, குறித்த அதிகாரிகளுக்கு உரிய குற்றப்பத்திரிகைகளை வழங்க வேண்டாம் என அப்போதைய காவல்துறை மா அதிபர் எழுத்துமூல கோரிக்கை விடுத்திருந்தமை தொடர்பில் ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன பொது பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தகவல் அறியும் ஆணைக்குழு
இவ்விடயம் தொடர்பாக ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன,
அந்தத் தகவல் தனியுரிமை தொடர்பான தகவல் என்பதால் பொதுப் பாதுகாப்பு அமைச்சு அதைத் தர மறுத்தது, இந்த மறுப்புக்கு எதிராக தகவல் அறியும் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
தகவல் அறியும் ஆணைக்குழு சரியான தகவல்களை ஆராயாமல் தனது கோரிக்கையை நிராகரித்துள்ளது. எனவே மேற்படி தீர்மானத்தை ரத்து செய்யப்பட வேண்டும்” என நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |