வவுனியாவில் தேடுதல் நடத்திய இராணுவம் மற்றும் பொலிஸ் - 28 பேருக்கு ஏற்பட்ட நிலை
வவுனியா நகரில் முகக் கவசம் அணியாது பயணித்தவர்களுக்கு எதிராக இராணுவத்தினரும், பொலிசாரும் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது 28 பேருக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன.
வவுனியா, பழைய பேரூந்து நிலையம் முன்பாக நேற்று பொலிசாரும், இராணுவத்தினரும் இணைந்து கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான விசேட நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது குறித்த பகுதியில் முகக் கவசம் அணியாது பயணித்தவர்கள், முகக் கவசத்தை சீராக அணியாது பயணித்தவர்கள் ஆகியோரை வழிமறித்து அவர்களுக்கு கடும் எச்சரிக்கை வழங்கப்பட்டதுடன்,
அவர்களுக்கு எதிராக முறைப்பாடுகளையும் பதிவு செய்தனர். அத்துடன், பழைய பேரூந்து நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் பேரூந்துகளையும் வழிமறித்து சோதனை மேற்கொண்டதுடன்,
பேரூந்துகளில் முகக் கவசத்தை சீராக அணியாதவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில், முகக் கவசத்தை அணியாமை மற்றும் முகக் கவசத்தை சீராக அணியாமை என்பவை தொடர்பில் 28 பேருக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்திருந்தனர்.