நுரைச்சோலை மின்நிலையத்தின் 2ஆவது இயந்திரம் இடைநிறுத்தம்
Power cut Sri Lanka
Sri Lanka
Sri Lankan Peoples
By Sathangani
நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம் தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீரமைப்புப் பணிகள் காரணமாக குறித்த இயந்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இதனால் தேசிய மின் விநியோகத்திற்கு எவ்வித தடங்கலும் ஏற்படாது என தேசிய அமைப்பு செயற்பாட்டாளர் நிறுவனம் (NSO) தெரிவித்துள்ளது.
மின் விநியோகத்தின் ஸ்திரத்தன்மை
குறித்த மின் உற்பத்தி இயந்திரம் முடக்கப்பட்டுள்ளமை தொடர்பாகத் தேசிய அமைப்பு செயற்பாட்டாளர் நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மின் விநியோகத்தின் ஸ்திரத்தன்மையைப் பேணித் தடங்கலின்றி மின்சாரத்தை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |