பிரதமரைத் இரகசியமாக நோட்டமிட்ட மூன்று நபர்கள் அதிரடி கைது...! எழுந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்
பிரதமர் ஹரினி அமரசூரியவைத் தொலைநோக்கி மூலம் கண்காணித்ததாக சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு ஹரினி அமரசூரிய நேற்று (21-07-2026) சென்றிருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர்களான மூவரையும் கொம்பனித் தெரு காவல்துறையினர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தினர்.
முழுமையான அறிக்கை
இதையடுத்து சந்தேக நபர்களான மூவரையும் இன்று (22-07-2026) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு இச்சம்பவம் குறித்த முழுமையான அறிக்கையை நாளை (23-07-2026) சமர்ப்பிக்குமாறு கொம்பனி தெரு காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களான மூவரில் இருவர் சகோதரர்கள் என்றும் அவர்கள் கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றைய நபர் முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் மூவரும் கொழும்புப் பகுதியில் பணிபுரிவதாக தெரிவித்திருந்தனர் என காவல்துறையினர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனித் தெரு காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
4 நாட்கள் முன்