கட்டுநாயக்கயில் சிக்கிய மூன்று வெளிநாட்டவர்கள்! வெளியாகிய காரணம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சைபர் குற்றச் செயல்களுக்காகக் கடத்த முயன்ற பெருமளவிலான கைபேசிகள் மற்றும் மின்கலன்களுடன் மூன்று சீன நாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, நேற்றையதினம்(19) செவ்வாய்க்கிழழை விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின்போது 5,140,000 ரூபாய் மதிப்புள்ள 87 கைபேசிகளும் 140 மின்கலன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்டவர்களில் 34 வயதுடைய ஒரு பெண்ணும் 35 வயதுடைய இரண்டு ஆண்களும் அடங்குவதுடன், இவர்கள் பசுமை வழித்தடம் வழியாக இப்பொருட்களைச் சட்டவிரோதமாகக் கொண்டு செல்ல மயன்றபோதே பிடிபட்டுள்ளனர்.

சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் மிட்டாய்கள் மற்றும் சாக்லேட்டுகளுக்கு நடுவே ஒரு பையிலும், ஆடைக்கு அடியில் அணியப்பட்டிருந்த பிரத்யேக ஜாக்கெட்டிலும் கைபேசிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெண்ணின் காலணிகளின் அடிப்பகுதியிலும், மற்றொரு ஆணின் பயணப் பையிலும் கூடுதல் கைபேசிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
தற்போது கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காகக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |