வவுவனியாவில் பள்ளத்தில் கவிழ்ந்த கார்: சிறுவன் உட்பட மூவர் வைத்தியசாலையில்!
Vavuniya
Sri Lanka
Accident
By Shalini Balachandran
வவுனியாவில் விபத்தில் சிக்கி மூவர் படுகாமடைந்துள்ளனர்.
ஓமந்தை - ஏ9 வீதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரமாக இருந்த பள்ளத்திற்குள் கவிழ்ந்ததில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் சிறுவன் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த கார் ஒன்று வவுனியா, ஒமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் உள்ள பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் சிறுவன் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து ஓமந்தை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்