ஈரான் மீது அமெரிக்கா உக்கிர தாக்குதல் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
அமெரிக்கா- ஈரான் இடையேயான மோதல் மீண்டும் தொடங்கியதால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீதான தாக்குதலுக்கு ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை பொறுப்பேற்றது. ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.
அமெரிக்கப் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலில், கெஷ்ம் தீவில் உள்ள குடியிருப்பு கட்டிடம் தாக்கப்பட்டதில் ஒரு தம்பதியினரும் அவர்களது இரண்டு வயது குழந்தையும் உயிரிழந்ததாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடுமையான தாக்குதல் அலை
குடும்பத்தின் மற்ற இரண்டு குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் ஹோர்மோஸ்கான் துணை ஆளுநர் அஹ்மத் நஃபிசியை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகி உள்ளது.

கிஷ் தீவிலும், புஷேரிலும், ஈரானின் எண்ணெய் தொழிலின் மையமான குசெஸ்தான் மாகாணத்தின் நான்கு இடங்களிலும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சூளுரைத்த சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்கப் படைகள் ஒரு "கடுமையான தாக்குதல் அலையை" நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (சென்ட்காம்) தெரிவித்திருந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |