செம்மணி புதைகுழி: ஐந்தாம் நாள் அகழ்வில் மனித எச்சங்கள் அடையாளம்
Tamils
Jaffna
chemmani mass graves jaffna
By Theepan
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில் வழக்கின் மூன்றாம் கட்டத்தில் ஐந்தாம் நாளாக நேற்றும் (01-05-2026) அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் நீதிவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் குறித்த அகழ்வு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மனித எச்சங்கள்
இதன்போது புதிதாக மூன்று மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகச் சட்டத்தரணி எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தற்போது வரை 244 மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு 240 மனித எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |