வாய்ப் புற்றுநோயினால் தினமும் உயிரிழக்கும் 3 பேர் : வெளியான அதிர்ச்சித் தகவல்
Cancer
Sri Lanka
Sri Lankan Peoples
By Sathangani
இலங்கையில் வாய்ப் புற்றுநோயினால் தினமும் 3 பேர் உயிரிழப்பதாக மஹரகம வாய் சுகாதார நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்
இதேவேளை நாளாந்தம் சுமார் 6 வாய் புற்றுநோயாளிகள் கண்டறியப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வைத்தியர் நிலந்த ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு பற்சிதைவு
இந்நிலையில் இலங்கையில் 5 வயதுடைய குழந்தைகளில் 63 வீதமானோர் பற்கள் சிதைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரும்பாலான குழந்தைகள் இரவு உறங்கச் செல்வதற்கு முன் பல் துலக்குவதில்லை என பாடசாலை சுகாதார ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் குறித்த தகவல்களை கோருவதற்கு ஆட்சேபனை தெரிவிக்க நீதிமன்றம் அனுமதி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி