நாட்டில் நடைபெற்ற விபத்துகளில் பலியான இளைஞர்கள்: காவல்துறை வெளியிட்ட தகவல்
நாட்டில் இன்றைய தினம் மூன்று பகுதிகளில் நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு (Sri lanka Police Media Division) தெரிவித்துள்ளது.
மொறொந்துடுவ, பண்டாரகம - களுத்துறை (Kalutara ) வீதியின் நெடேகட சந்தியில் இன்று (14) காலை பண்டாரகமவிலிருந்து (Bandaragama) களுத்துறை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பேருந்து தரிப்பிடத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
காவல்துறை
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி கோனதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
கொலன்னாவ (Kolonnawa) பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மொரந்துடுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேருக்கு நேர்
இதேவேளை, கல்கமுவ, பாதெனிய - அனுராதபுரம் (Anuradhapura) வீதியின் ஜயபிம சந்தியில் நேற்று (13) பிற்பகல் அநுராதபுரத்திலிருந்து பாதெனிய நோக்கி பயணித்த கெப் வண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நொச்சியாகம (Nochiyagam) பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கல்கமுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக விசாரணை
மேலும், தம்புள்ளை (Dambulla) - ஹபரணை (Habarana) பிரதான வீதியின் திகம்பத்தஹ பகுதியில் இன்று (14) காலை தம்புள்ளையிலிருந்து ஹபரணை நோக்கிச் சென்ற வேன் ஒன்று முன்னால் வந்த லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் வேனின் பயணித்த இளைஞர் ஒருவர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சீகிரிய (Sigiriya) காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |