கடவுச்சீட்டு இல்லாமல் பயணிக்ககூடிய 3 பிரமுகர்கள் யார் தெரியுமா!
உலகில் மூன்று பிரமுகர்கள் மட்டும் கடவுச்சீட்டு இல்லாமல் எல்லா இடங்களுக்கும் சென்று வர முடியும்.
200க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ள நிலையில்,ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்ல கடவுச்சீட்டு என்பது அவசியமானது.
பிரிட்டன் மன்னர், ஜப்பான் மன்னன் மற்றும் அரசி ஆகிய மூவருக்கும் தான் கடவுச்சீட்டு இல்லாமல் எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் பயணிக்க கூடிய சிறப்பு சலுகை உள்ளது.
16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் நடவடிக்கை
பிரிட்டன் மன்னராக சார்லஸ்
பிரிட்டன் மன்னராக சார்லஸ் ஆவதற்கு முன்பு மறைந்த ராணி எலிசபெத்திடம் இந்த சலுகை இருந்த நிலையில் தற்போது அவருக்கு கிடைத்துள்ளது.
சார்லஸ் பிரிட்டன் மன்னராக பதவியேற்ற பின், ''பிரிட்டனின் அரச குடும்ப தலைமை பொறுப்பில் மன்னர் சார்லஸ் இருக்கிறார், எனவே அவரை முழு மரியாதையுடன் எங்கும் செல்ல அனுமதிக்க வேண்டும்.
இதில் எந்த தடையும் இருக்கக்கூடாது'' என அனைத்து நாடுகளுக்கும் வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.
ஜப்பான் பேரரசர்
சார்லஸ்க்கு இந்த சலுகை இருந்தாலும் அவரது மனைவிக்கு இந்த சலுகை இல்லை.
பிரிட்டனில் அரச குடும்ப அரியணையில் அமர்ந்திருக்கும் நபருக்கு இந்த சலுகை வழங்கப்படுகின்றது.
ஜப்பான் பேரரசர் நருஹிட்டோ அவரின் மனைவி ஓவாடா ஜப்பானின் பேரரசி ஆகியோருக்கும் இந்த சிறப்பு சலுகை காணப்படுகின்றது.
ஜப்பானின் அரச பதவி
ஜப்பானின் அரசர் பதவியை துறந்த பின்னர் இந்த சலுகை திரும்ப பெறப்படும்.
இந்த சிறப்பு ஏற்பாட்டை 1971ஆம் ஆண்டு முதல் வெளியுறவு அமைச்சகம் பேரரசர் மற்றும் பேரரசிக்கு வழங்கியதாக ஜப்பானின் அரசு ஆவண பதிவுகள் காட்டுகின்றது.
இவர்களை தவிர உலகின் அனைத்து நாட்டு பிரதமர்கள் மற்றும் அதிபர்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குச் செல்லும்போது கடவுச்சீட்டு பயன்படுத்துவது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |