16 வயதுடைய சிறுமி மீது துப்பாக்கிச் சூடு - மூவர் கைது
டிசம்பர் 30 ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு 9 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் வசிக்கும் 27, 32 மற்றும் 35 வயதுடையவர்கள் ஆவர்.
கொஹுவலை, சரணங்கர வீதி, போதியவத்தை பகுதிக்கு டிசம்பர் 30 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
விசாரணை
துப்பாக்கிச் சூட்டில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் காயமடைந்து களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கு வைக்கப்பட்டவர் சிறுமி அல்ல சிறுமியின் தாய் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹுவலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |