மேற்கு ஆசிய வலயத்தில் 3 தமிழ் வீரர்கள் சாதனை
கடந்த மாதம் நடைபெற்று முடிந்த மேற்கு ஆசிய வலய சதுரங்கப் போட்டிகளில் மூன்று தமிழ் வீரர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதன் மூலம் 12 வயதிற்கு குறைவான ஆண்கள் பிரிவில் இலங்கை அணி மூன்றாவது இடத்தைப்பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் பங்குபற்றிய வீரர்களுள் பிரகலாதனன் ஜனுக்க்ஷன் 5 1/2 புள்ளிகளுடன் இலங்கை வீரர்களுள் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். இவர் Singing fish chess கழக வீரரும் யாழ்/இந்துக் கல்லூரி மாணவனும் ஆவார்.
அத்துடன் 16 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவுப் போட்டியிலும் இலங்கை அணிக்கு மூன்றாவது இடம் கிடைத்தது. இப் பிரிவில் யாழ்/ இந்துக் கல்லூரி மாணவன் அருணகிரினாதன் ஆருத்ரன் 4.5 புள்ளிகளுடன் இலங்கை வீரர்களுள் மூன்றாவது இடத்தைப் பெற்றார்.
14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் இலங்கை அணிக்கு நான்காவது இடமே கிடைக்கப்பெற்றது. இருந்தபோதிலும் Gateway International school இல் கல்வி கற்கும் சரவணபவன் பிரிஜேஷ் 6 புள்ளிகளுடன் இலங்கை வீரர்களுள் முதல் இடத்தைப் பெற்றார்.
இவ் வருடம் நடைபெற்ற தேசிய இளைஞர் சதுரங்கப் போட்டிகளில் ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் முதல் 30 இடங்களைப் பெற்ற வீரர்கள் இலங்கை அணி சார்பாக விளையாட அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

