வெனிசுலாவில் மனதை பதைபதைக்க வைத்த சம்பவம் - 6 நாட்களுக்குப் பின் 3 வயது சிறுவன் மீட்பு
வெனிசுலாவில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 வயது சிறுவன், 6 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக ஜோர்டானிய மீட்புக் குழு தெரிவித்துள்ளது.
லா குவைரா மாநிலத்தில் உள்ள லாஸ் கோரல்ஸ் கார்டன் கட்டிடத்திலிருந்து ஜோர்டானைச் சேர்ந்த மீட்புக் குழுவினரால் மோரன் மீட்கப்பட்டார் என்று வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரித்துள்ளார்.
அச்சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, கராகஸ் நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வெனிசுலா அதிகாரிகள், தற்போது சிறுவனின் ஆரோக்கிய நிலைமை சீராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கான மக்கள்
கடந்த புதன்கிழமை, ஒரு நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் வெனிசுலாவில் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

இதனால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டதாகவும் அதிகாரிகளும் மீட்புக் குழுவினரும் தெரித்துள்ளனர்.
நிலநடுக்கங்களால் கிட்டத்தட்ட 59,000 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவோ அல்லது அழிக்கப்பட்டுள்ளதாகவோ நாசா மதிப்பிட்டுள்ளது
இடிபாடுகளுக்கு அடியில் உயிருடன் இருப்பவர்களைத் தொடர்ந்து கண்டுபிடிப்போம் என்ற நம்பிக்கையை நாம் கைவிடக்கூடாது என்று தேசிய சட்டமன்றத் தலைவர் ஜார்ஜ் தெரித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |