3 வயது சிறுமி தவறுதலாக துப்பாக்கியால் சுட்டதில் ஒரு வயது குழந்தை பலி
United States of America
By pavan
அமெரிக்காவில் 3 வயது குழந்தை தவறுதலாக துப்பாக்கியால் சுட்டதில் ஒரு வயது சகோதரி உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவின் சான்டியாகோ கவுண்டியில் உள்ள பால்ப்ரூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 3 வயது குழந்தை ஒன்று அங்கிருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடியுள்ளது.
அப்போது துப்பாக்கி தவறுதலாக சுட்டது. இதில் அந்த குழந்தையின் சகோதரியான ஒரு வயது குழந்தை தலையில் காயம் அடைந்து உயிரிழந்தது.
காவல்துறை விசாரணை

வீட்டில் பாதுகாப்பற்ற வகையில் கைத்துப்பாக்கியை வைத்துள்ளனர் என்றும் அதை குழந்தை எடுத்த போது தவறுதலாக வெடித்தது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி