சர்ச்சையை கிளப்பிய காத்தான்குடி கைது சம்பவம்: நீதவான் வழங்கிய அதிரடி உத்தரவு
காத்தான்குடியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 30 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் நேற்று மாலை முற்படுத்தப்பட்ட போது அவர்களை சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் 26ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் உடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காத்தான்குடி காவல்நிலைய பொறுப்பதிகாரி டி. பி. கஜநாயக்க எமது ஊடகத்திற்கு தெரிவித்திருந்தார்.
காத்தான்குடி பாலமுனை பகுதியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக கூட்டம் நடாத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுத்துள்ள ஸாரான் காசிம் சாகோதரியின் கணவர் மற்றும் 4 பேர் உட்பட 30 பேரை சந்தேகத்தின் பேரில் நேற்று வெள்ளிக்கிழமை (01) அதிகாலையில் காவல்துறையினர் கைது செய்தனர்.
விசேட சோதனை
அதேவேளை, 3 மோட்டர்சைக்கிள்கள், முச்சக்கரவண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டதுடன் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு காவல்துறையினர் சென்று விசேட சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதையடுத்து பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் இவர்களை இன்று மாலையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் 26ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டு பிணையில் விடுவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |