திருமண நிகழ்வில் பட்டாசு கொளுத்தியவர் மரணம்
Wedding
Accident
Death
By Sumithiran
திருமண நிகழ்வில் பட்டாசு கொளுத்தியவர் அது வெடித்து தீ பற்றியதில் உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தம்புத்தேகம, தேக்கவத்த பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது.
பட்டாசு தீப்பிடித்து
குறித்த நபர் தனது வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றின் போது பட்டாசு ஒன்று வெடிக்காததால், மீண்டும் அதனை பற்றவைக்க முயன்றபோது, பட்டாசு தீப்பிடித்து அவரது தலையில் பட்டதில் அவர் காயமடைந்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த 30 வயதுடைய நபர் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி