கொரோனா தொற்றிலிருந்து 317 பேர் பூரண குணம்
Srilanka
Corona
World
By MKkamshan
கொரோனா தொற்றில் இருந்து நாட்டில் மேலும் 317 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் , இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 512,481ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 539,981அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் 19 பேர் உயிரிழந்தனர். இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,725 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் உலகளாவிய ரீதியில் 246,900,612 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதோடு 223,951,800 கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்துள்ளனர் .