பிரித்தானியாவில் நினைவு கூரப்பட்ட மாவை சேனாதிராஜா
Mavai Senathirajah
United Kingdom
ITAK
By Raghav
இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) 31 ஆவது நினைவு நாள் பிரித்தானியாவில் (United Kingdom) அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வானது, ஹெரொவ் ஆர்ட்ஸ் சென்டரில் (Harrow Arts Centre) நேற்றையதினம் (2024.02.28) நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்
இதன்போது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி உணர்வு ரீதியாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தனது 82 ஆவது வயதில் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி காலமானார்.
உடல் நலக்குறைவால் யாழ். போதனைா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 2 நாட்கள் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
3 வாரங்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி