ஆறு மாதங்களில் லஞ்ச குற்றச்சாட்டுக்களில் 34 நபர்கள் கைது
Sri Lanka
Sri Lankan Peoples
Crime
By Shalini Balachandran
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் லஞ்சம் தொடர்பான குற்றங்களுக்காக மொத்தம் 34 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30 வரை நடத்தப்பட்ட 54 சோதனைகளைத் தொடர்ந்து இந்த கைதுகள் இடம்பற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடுகள்
இந்தக் காலப்பகுதியில் 3,022 முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் பத்து காவல்துறை அதிகாரிகளும், நீதி அமைச்சின் ஐந்து அதிகாரிகளும் மற்றும் சுகாதார அமைச்சின் இரண்டு பேரும் இலங்கை போக்குவரத்து சபையின் இரண்டு ஊழியர்களும் அடங்குவதாக லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா

3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்