நைஜீரியாவில் வான்வழி தாக்குதல் நடத்திய ராணுவம் : 35 பேர் உயிரிழப்பு!
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் (Nigeria) போகோஹராம் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த நைஜீரிய ஜனாதிபதி போலா தினுபு தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில், நைஜீரிய பாதுகாப்புப் படையினரின் தொடர் வான்வழித் தாக்குதல்களில் 35 ஜிஹாதி போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கேமரூன் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதல்களில் இந்த இறப்புகள் நிகழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திட்டமிட்ட தாக்குதல்
இருப்பினும் நைஜீரியா மீது ஜிஹாதி போராளிகள் திட்டமிட்ட தாக்குதலைத் தடுக்க இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களில் நைஜீரிய பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்களில் சுமார் 800 போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நைஜீரிய அரசுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாகவே இதுவரை 35 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
மேலும் 20 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து சென்றதாக ஐ.நா. அமைப்பு தெரிவித்து உள்ளது.
நைஜீரிய விமான படை
இந்த நிலையில், நாட்டின் வடகிழக்கே போர்னோ மாகாணத்தில் போகோஹராம் பயங்கரவாதிகளை இலக்காக கொண்டு அந்த நாட்டின் இராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
அப்போது கேமரூன் நாட்டுக்கு அருகே கும்ஷே பகுதியில் 4 இடங்களை இலக்காக கொண்டு இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக நைஜீரிய விமான படையின் செய்தி தொடர்பாளர் எஹிமென் எஜோடேம் தெரிவித்துள்ளார்.
மேலும் நைஜீரிய அதிபர் போலா தினுபு தலைமையிலான அரசு, பயங்கரவாதிகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டாலும், தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 13 மணி நேரம் முன்
