இலங்கைக்கு கிடைக்கவுள்ள பல மில்லியன் கணக்கிலான கடன் நிவாரணம்

Bandula Gunawardane IMF Sri Lanka Economy of Sri Lanka Budget 2024
By Sathangani Jun 11, 2024 05:16 AM GMT
Report

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பின் கீழ் இலங்கைக்கு 3655 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் நிவாரணம் கிடைக்கும் என கருதப்படுவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.

அதிபர் ஊடக மையத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

“இதுவரை அரச திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள், உள்ளிட்ட அரசாங்க சபைகளில் பணிபுரியும் பல்வேறு தரப்பினரும் போராட்டங்களையும், வேலை நிறுத்தங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

போராட்டத்தில் குதிக்கும் ஆசிரியர் சங்கம்: பாடசாலை விடுமுறை தொடர்பில் குழப்பநிலை

போராட்டத்தில் குதிக்கும் ஆசிரியர் சங்கம்: பாடசாலை விடுமுறை தொடர்பில் குழப்பநிலை

2024 வரவு செலவுத்திட்டம்

இதன்படி, அங்கு நிலவும் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட சம்பளம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதற்காக அதிபரின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்கான தீர்வுகளை பரிந்துரை செய்து, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் முழுமையான தீர்வுகளை வழங்குவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையிலான அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அரசாங்கத்திற்கு எத்தனை தேவைகள் இருந்தாலும் 2024 வரவு செலவுத்திட்ட ஆவணத்தின் மூலம் கூடுதல் நிதி ஒதுக்கீடுகளைப் பெற முடியாது.

இலங்கைக்கு கிடைக்கவுள்ள பல மில்லியன் கணக்கிலான கடன் நிவாரணம் | 3655 Million Usd In Debt Relief To Sri Lanka

கடந்த நான்கு தசாப்தங்களாக ஒரு அரசாங்கத்தின் அன்றாட அலுவல்களை மேற்கொள்வதற்குப் போதுமான வருமானம் இருக்கவில்லை என்பதையும் இங்கு நினைவுகூர வேண்டும்.

2023ஆம் ஆண்டு அனைத்து வகையான வரிகளையும் அதிகரித்து உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 1550 பில்லியன் ரூபாவை வசூலித்துள்ளது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வரிகள் மூலம் சுங்கத் திணைக்களம் (Sri Lanka Customs) 923 பில்லியன் ரூபாவை வசூலித்துள்ளது.

மதுவரித் திணைக்களம் (Excise Department of Sri Lanka) 169 பில்லியன் ரூபாவை வசூலித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் (Department of Motor Traffic)  20 பில்லியன் ரூபாவை வசூலித்துள்ளதுடன், வரி அல்லாத வருமானம் 219 பில்லியன் ரூபா கிடைத்துள்ளது.

இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் இதுதான்: சரித் அசலங்க விளக்கம்

இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் இதுதான்: சரித் அசலங்க விளக்கம்

4.3 டிரில்லியன் ரூபா செலவு

அத்துடன் 16 பில்லியன் ரூபா நன்கொடையாகக் கிடைத்துள்ளது. பல்வேறு வைப்பு நிதிகள் மூலம் 304 பில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து வழிகளிலும் பெறப்பட்ட மொத்த வருமானம் 3201 பில்லியன் ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த வருமானங்கள் மூலம் அரசாங்கத்தின் அன்றாட செயற்பாடுகள், அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், சமுர்த்தி, அஸ்வெசும போன்ற நலன்புரி கொடுப்பனவுகள் மற்றும் கடன்களுக்கான வட்டி என்பவற்றைச் செலுத்த வேண்டும். அதற்காக 2023ஆம் ஆண்டில் மட்டும் 4.3 டிரில்லியன் ரூபா செலவாகியுள்ளன.

இலங்கைக்கு கிடைக்கவுள்ள பல மில்லியன் கணக்கிலான கடன் நிவாரணம் | 3655 Million Usd In Debt Relief To Sri Lanka

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது, யார் அரசாங்கத்தை வழிநடத்தினாலும், அவர்கள் 2028 வரை சர்வதேச நாணய நிதியத்துடன் (International Monetary Fund) ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட கடன் ஒப்பந்தங்களைப் பேண வேண்டும்.

அதன்படி, 2025 ஆம் ஆண்டளவில், வெளிநாட்டு வள இடைவெளி சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு போதுமானதாக இருக்காது. கடந்த வருட அனுபவத்தின்படி அதற்கு 5018 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் எந்த அரசாங்கமும் இந்த நிதியை ஈடுசெய்ய வேண்டும். அதற்காக சர்வதேச நாணய நிதியம் 663 மில்லியன் டொலர்களை நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் வழங்க இணங்கியுள்ளது.

கண் நோயாளர்கள் பயன்படுத்தும் மருந்து குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

கண் நோயாளர்கள் பயன்படுத்தும் மருந்து குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

ரணில் விக்ரமசிங்க உடன்பாடு 

அதன்போது, வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை ஈடுசெய்ய சர்வதேச நாணய நிதியம் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

உலக வங்கி (World Bank) 400 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், ஆசிய அபிவிருத்தி வங்கி (Asian Development Bank) 300 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு கிடைக்கவுள்ள பல மில்லியன் கணக்கிலான கடன் நிவாரணம் | 3655 Million Usd In Debt Relief To Sri Lanka

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பின் கீழ் 3655 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் நிவாரணம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

அத்துடன் அதிபர் ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் உடன்பாடு தெரிவித்துள்ள உடன்படிக்கையின் பிரகாரம் ஆட்சிக்கு வர எதிர்பார்க்கும் தரப்பினர்கள் செயற்படுவார்களா? இல்லையா? என்பதை நாட்டுக்குத் தெரிவிக்க வேண்டும்.

அதன்படி, சர்வதேச ஒத்துழைப்பை எதிர்பார்க்காத எந்த ஒருவருக்கும் நாட்டின் எதிர்கால வரவு செலவுத் திட்டத்திற்கு வேறு மாற்றுவழி கிடையாது என்பதைக் கூற வேண்டும்” என அமைச்சர் தெரிவித்தார்.

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020