காவல்துறை உத்தியோகத்தர்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
srilanka
police
using-cannabis
By Sumithiran
மேல்மாகாணத்தில் கடமையாற்றும் 37 காவல்துறை உத்தியோகத்தர்கள் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில் காவல்துறை மா அதிபருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பான பட்டியலை அவர் தயார் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோனிடம் காவல்துறை மா அதிபர் குறித்த பட்டியலை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்களில் பெரும்பான்மையானவர்கள் கஞ்சாவிற்கு அடிமையானவர்கள் எனவும், ஏனையவர்கள் ஐஸ் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும், ஹெரோயின் போதைக்கு அடிமையான இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.