உலகின் சிறந்த கோப்பி வகைகள்: பட்டியலை வெளியிட்டது டேஸ்ட் எட்லஸ்
குரோஷியாவை தளமாகக் கொண்ட டேஸ்ட் எட்லஸ்(TasteAtlas) என்ற நிறுவனம் உலகின் சிறந்த கோப்பியின் பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது.
இந்நிறுவனம் உலகின் பாரம்பரிய உணவுகள், சமையல் குறிப்புகள், உணவு மதிப்பீட்டு விமர்சனங்கள், உணவுகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடல் மற்றும் ஒன்லைன் பயண வழிகாட்டல் போன்றவற்றுக்கு புகழ்பெற்றது.
கோப்பி தரம்
இந்நிறுவனம் சமீபத்தில் உலகளாவிய கோப்பி தரம் மதிப்பீடு குறித்து ஆய்வு நடத்தி புகழ்பெற்ற உலகின் சிறந்த 38 கோப்பிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் கியூபன் எஸ்பிரெசோ (Cuban Espresso) என்ற கோப்பி வகை முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பில்டர் கோப்பி
இந்தியாவின் புகழ்பெற்ற தென் இந்திய பில்டர் கோப்பி (South Indian Filter Coffee) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதுடன் மூன்றாவது இடத்தில் கிரீஸ் நாட்டின் Espresso Freddo உள்ளது.
மேலும் கியூபன் எஸ்பிரெசோ என்பது கியூபாவில் தோன்றிய ஒரு வகை எஸ்பிரெசோ, இது வறுத்த கோப்பி கொட்டை மற்றும் பழுப்பு சர்க்கரை பயன்படுத்தி இயந்திரத்தில் தயாரிக்கப்பட்ட கோப்பியாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |