மியன்மாரில் பதிவான திடீர் நிலநடுக்கம்
மியன்மாரில் (Myanmar) இன்று (03) காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காலை 6.10 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
10 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சேதம் மற்றும் பாதிப்பு
குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
EQ of M: 4.1, On: 03/07/2025 06:10:48 IST, Lat: 22.01 N, Long: 95.58 E, Depth: 10 Km, Location: Myanmar.
— National Center for Seismology (@NCS_Earthquake) July 3, 2025
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/Hg30563Ukz
ஆழமற்ற நிலநடுக்கங்கள் பொதுவாக ஆழமான நிலநடுக்கங்களை விட ஆபத்தானவை என சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஏனெனில் ஆழமற்ற நிலநடுக்கங்களிலிருந்து வரும் நில அதிர்வு அலைகள் மேற்பரப்புக்கு பயணிக்க குறைந்த தூரத்தைக் கொண்டுள்ளன, இதன் விளைவாக வலுவான நில அதிர்வு மற்றும் கட்டமைப்புகளுக்கு அதிக சேதம் மற்றும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தந்தை செல்வா சிலை திறப்பு: தமிழரசுக்கட்சிக்கு இடையில் வெடித்த முரண்பாடு-பதவி விலகிய முக்கிய உறுப்பினர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
