ஈரான் -அமெரிக்கா ஒப்பந்தம் : 14 அம்ச முன்மொழிவு இவைதான்

United States of America Iran Iran-US Conflict
By Jaso Jun 16, 2026 01:23 PM GMT
Report

ஈரான்-அமெரிக்கா இடையிலான போா் நிறுத்தத்தின் வரைவு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது இவ்விவகாரத்தில் மத்தியஸ்தரான பாகிஸ்தான் முன்னிலையில் சுவிட்சா்லாந்தில் வரும் வெள்ளிக்கிழமை இருதரப்பினரும் ஒப்பந்தத்தில் முறைப்படி கையொப்பமிடுகின்றனா்.

இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க தரப்பில் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் கையொப்பமிடுவார் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள 14 அம்சங்கள் குறித்த விவரங்களை ஈரான் அரசு சாா்பு ‘மெஹா்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவை வருமாறு: 

லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும், நிரந்தரமாகவும் நிறுத்துதல்.

ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட மாட்டோம் மற்றும் அதன் இறையாண்மையை மதிப்போம் என அமெரிக்கா உறுதியளிப்பது.

ஈரான் துறைமுகங்களுக்கு எதிரான அமெரிக்காவின் கடல்வழி முற்றுகையை 30 நாள்களுக்குள் முழுமையாக விலக்கிக் கொள்வது.

ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அமெரிக்க படைகளைத் திரும்பப் பெறுவது.

ஈரான் ஏற்பாடுகளின்கீழ் 30 நாள்களுக்குள் ஹோா்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது.

ஈரானின் எண்ணெய், பெட்ரோகெமிக்கல் பொருள்கள் மற்றும் அது தொடா்புடைய ஏற்றுமதிகள் மீதான தடைகளை நிறுத்திவைப்பது.

எரிபொருள் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாயை ஈரான் முழுமையாகப் பயன்படுத்த அனுமதிப்பது.

ஈரானுக்காக குறைந்தபட்சம் 30,000 கோடி டொலா் மதிப்பிலான மறுசீரமைப்புத் திட்டங்களை வழங்க அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் உறுதியளிப்பது.

அணுசக்தி விவகாரங்கள் மற்றும் விரிவான தடைகள் நீக்கம் குறித்து இறுதி ஒப்பந்தத்தை எட்ட 60 நாள்கள் பேச்சுவாா்த்தை நடத்துவது.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின்கீழ், அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யப் போவதில்லை என்ற ஈரானின் புதுப்பிக்கப்பட்ட உறுதிப்பாடு.

பேச்சுவாா்த்தை நடைபெறும் காலத்தில் பிராந்தியத்தில் இராணுவக் குவிப்பை அதிகரிக்க மாட்டோம் மற்றும் புதிய தடைகளை விதிக்க மாட்டோம் என அமெரிக்கா உறுதியளிப்பது.

பேச்சுவாா்த்தைக் காலத்தில் ஈரானின் முடக்கப்பட்ட 2,400 டொலா் நிதியை விடுவிப்பது; இதில் பாதி தொகையை பேச்சுவாா்த்தை தொடங்குவதற்கு முன்பே வழங்குவது.

ஒப்பந்தம் முறையாகச் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க மேற்பாா்வை வழிமுறை ஒன்றை உருவாக்குவது.

ஐ.நா. பாதுகாப்பு சபை தீா்மானத்தின் மூலம் இறுதி ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் பெறுவது.

ஈரான் விதித்துள்ள நிபந்தனை 

ஈரானின் முடக்கப்பட்ட நிதி விடுவிப்பு, எண்ணெய் ஏற்றுமதி மீதான தடை மற்றும் கடல்வழி முற்றுகை விலக்கு ஆகிய 3 அம்சங்களை நிறைவேற்றும்வரை இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தை தொடங்கப்படாது என ஈரான் நிபந்தனை விதித்துள்ளதாகத் தெரிகிறது.

ஈரான் -அமெரிக்கா ஒப்பந்தம் : 14 அம்ச முன்மொழிவு இவைதான் | 4 Points In The Iran Us Agreement

அதேபோல், ஈரானின் ஏவுகணைத் திட்டம் மற்றும் பிராந்திய ஆயுதக் குழுக்களுக்கான ஆதரவு ஆகியவை அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அமெரிக்கா - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது! ஈரான் அரசு விடுத்த அறிவிப்பு

அமெரிக்கா - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது! ஈரான் அரசு விடுத்த அறிவிப்பு

போரை முடிவிற்கு கொண்டுவர ஈரான் விதித்துள்ள முன்நிபந்தனை

போரை முடிவிற்கு கொண்டுவர ஈரான் விதித்துள்ள முன்நிபந்தனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

  

ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026