முள்ளிவாய்க்கால் கஞ்சி விவகாரம்...சம்பூரில் கைதுசெய்யப்பட்ட நால்வர்: நீதிமன்றின் உத்தரவு
திருகோணமலை - சம்பூர் பகுதியில் பல்கலைக்கழக மாணவி உட்பட நால்வருக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்க விதிக்கப்பட்டிருந்த தடையை மூதூர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.
இதேவேளை நான்கு சந்தேகநபர்களும் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதினால் அவர்கள் தொடர்பான அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் அவர்களையும் விரைவில் விடுதலை செய்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
கடந்த 12 ஆம் திகதி நள்ளிரவில் திருகோணமலை, சம்பூர் காவல்துறை பிரிவிலுள்ள சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவி உட்பட நான்கு பேர் சம்பூர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து குறித்த நால்வரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து நால்வருக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது அந்த தடையை நீதிமன்றம் நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |