கழிப்பறை குழிக்குள் விழுந்த சிறுவன்...! நேர்ந்த கதி
புத்தளத்தில் கழிப்பறை குழிக்குள் விழுந்து நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் புத்தளம் - ஆணமடுவ பகுதியில் நேற்று (29) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் ஆணமடுவ, சியம்பலாகஸ்ஹேன பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் தாய்
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவனின் தாய், வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்த போது சிறுவனை அவரது பாட்டியிடம் ஒப்படைத்துள்ளார்.

பாட்டியின் வீட்டிலிருந்து மீண்டும் தனது வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்த போதே, மழையினால் நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் சிறுவன் தவறி விழுந்துள்ளார்.
சிறுவன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததைக் கண்டு தேடிய போது, குழிக்குள் விழுந்து நீரில் மூழ்கிய நிலையில் அவர் மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக அவதானம்
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மரணப் பரிசோதனை இன்று (30) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, நீரில் மூழ்கியமையாலேயே மரணம் சம்பவித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என ஆணமடுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தமது பிள்ளைகள் தொடர்பில் மேலதிக அவதானத்துடன் இருக்குமாறு காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |