தமிழர் பகுதியில் உலக சாதனை படைத்த 4 வயது சிறுவன்
தமிழர் பகுதியை (Trincomalee) சேர்ந்த நஸ்மி அக்லான் பிலால் என்ற 4 வயது சிறுவன் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இவர் திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாக்கேணி பகுதியை சேர்ந்தவர்.
ஐக்கிய இராச்சியத்தை (UK) தலைமையகமாகக் கொண்ட Worldwide Book of Records நிறுவனத்தினால் உலக சாதனையாளர்களை இனம் காண்பதற்கான போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் கலந்துக்கொண்டு பத்தின் 100ஆம் அடுக்கு வரை அவற்றின் பெயர்களை ஆங்கிலத்தில் 2 நிமிடம் 12 செக்கன்களில் கூறி சிறுவன் நஸ்மி சாதனை படைத்துள்ளார்.
உலக சாதனை
இந்நிலையில், சாதனையை நிகழ்த்திய சிறுவனுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இச்சாதனை செய்தமைக்காக அந்த நிறுவனத்தால் சிறுவனுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் வைத்தியசாலையில் பணிபுரியும் இயன் மருத்துவர் நஸார் முஹமட் நஸ்மி மற்றும் கிண்ணியா வைத்தியசாலையில் கடமையாற்றும் இயன் மருத்துவர் அஸ்ரப் பாத்திமா பஸீஹா தம்பதியரின் சிரேஷ்ட புதல்வர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |