காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவல்- சிக்கிய இளைஞர்கள்!
வவுனியாவில் கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கையை வவுனியா காவல் துறையினர் முன்னெடுத்தனர்.
வவுனியா காவல் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு தலமையிலான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இளைஞர்களை சோதனை செய்த போது, அவர்களிடம் இருந்து ஹெரோயின், கஞ்சா மற்றும் எட்டு கை தொலைபேசிகள் எட்டு லைட்டர் என்பன கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 800 மில்லிகிராம் கேரளா கஞ்சாவும் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் தாண்டிக்குளம், புதுக்குளம், மரக்காரம்பளை மற்றும் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 24, 25, 22, 29 வயதுடையவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் குறித்த நபர்களை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
