லைபீரியாவில் பெட்ரோல் கொள்கலன் வெடித்ததில் 40 பேர் பலி
Africa
By Sathangani
மத்திய லைபீரியாவில் பெட்ரோல் கொள்கலன் லொறி வெடித்ததில் குறைந்தது 40 பேர் உயிரிழந்ததாக மேற்கு ஆபிரிக்க நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரி பிரான்சிஸ் கேட்டே நேற்று (27) தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை தாமதமாக பெட்ரோல் ஏற்ற கொண்டு வந்த கொள்கலன் லொறி திடீரென விபத்துக்குள்ளானது.
பலர் உயிரிழப்பு
இந்த விபத்தில் பெட்ரோல் கொள்கலன் வொறி வெடித்துச் சிதறியதில் சம்பவ இடத்தில் கூடியிருந்த பலர் உயிரிழந்ததுடன் பெரும்பாலானோர் காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இன்னும் பலர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி