வவுனியாவில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான மழைவீழ்ச்சி : வெளியான தகவல்
வவுனியா மாவட்டத்தில் 2026 ஜனவரி மாதம் முதல் இதுவரை 40 வீதமான மழை வீழ்ச்சியே பதிவாகியுள்ளதாக வவுனியா மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தின் காலநிலை தொடர்பாக ஊடகவியலாளரால் கேள்வியெழுப்பப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தினை பொறுத்தவரை வருடாந்த சராசரி மழை வீழ்ச்சியானது 1400 மில்லிமீற்றர் வரை காணப்படுகின்றது. எனினும், இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் இன்று வரையான காலப்பகுதியில் 559.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியே பதிவாகியுள்ளது.
அதிகளவான மழை
இதேவேளை நேற்றையதினம் (13) 21.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இம்மாதம் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது.

இம்மாதத்தின் இறுதியில் இருந்து வடகீழ் பருவமழை ஆரம்பமாகவுள்ளது. அத்துடன் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மாவட்டத்தில் அதிகளவான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக இக்காலப்பகுதியில் தாழமுக்க நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில், மாவட்டத்தில் வழக்கத்தை விட அதிகளவான கனமழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |