40 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகளிடம் கடுமையாக நடந்துகொண்ட எம்.ஜி.ஆர் அரசு

Sri Lankan Tamils Tamil nadu Sri Lanka Final War
By Dharu Nov 24, 2026 06:25 AM GMT
Report

தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் ஆட்சிக் காலத்தில், ஈழப் போராளிக் குழுக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட மிகப்பெரிய அதிரடி நடவடிக்கையான ஒபரேஷன் டைகர் நிகழ்ந்து 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஈழப் போராளிக் குழுக்களுக்கு ஆதரவான போக்கைக் கடைப்பிடித்து வந்ததாக கூறப்படும் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் அவரது நிர்வாகம், 40 ஆண்டுகளுக்கு முன்பு 1986-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மட்டும் அவர்களிடம் மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்தது.

இந்த நடவடிக்கையினை தொடர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முன்னெடுத்த உண்ணாவிரத போராட்டம் எம்.ஜி.ராமச்சந்திரனின் நிலைப்பாட்டை மாற்றி அமைத்திருந்தது.

தலைவர் பிரபாகரனைக் கைது செய்ய திடீர் நடவடிக்கை

தலைவர் பிரபாகரனைக் கைது செய்ய திடீர் நடவடிக்கை

பெருமளவிலான நவீன ஆயுதங்கள் மீட்பு

1986 நவம்பர் மாதம் தீபாவளி தினத்தன்று, சென்னை கோடம்பாக்கம் திருவள்ளுவர்புரம் முதல் வீதியில் ஏற்பட்ட தகராறில், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அமைப்பினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

40 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகளிடம் கடுமையாக நடந்துகொண்ட எம்.ஜி.ஆர் அரசு | 40 Years Mgr Government Was Harsh Towards The Ltt

இதில் பொதுமக்களைச் சுட வேண்டாம் என மன்றாடிய திருநாவுக்கரசு (24) என்ற உள்ளூர் இளைஞர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, அன்றைய சென்னை காவல்துறை ஆணையர் டபிள்யூ.ஐ. தேவாரம் தலைமையிலான காவல்துறையினர் போராளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, டக்ளஸ் தேவானந்தா உட்பட 10 பேரைக் கைது செய்திருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, 1986 நவம்பர் 8-ஆம் திகதி சென்னை மற்றும் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் காவல்துறையினர் ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்தியுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் மூலம், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஈழப் போராளிக் குழுக்களிடம் இருந்த பெருமளவிலான நவீன ஆயுதங்கள், மற்றும் வயர்லெஸ் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைத் தமிழக அரசு பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அதிரடி நடவடிக்கையின் போது, விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அன்ரன் பாலசிங்கம், லாரன்ஸ் திலகர் மற்றும் சுமார் 100 போராளிகளைக் காவல்துறையினர் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

இந்தியா-புலிகள் யுத்தத்திற்கு புலிகளின் வன்முறைதான் காரணமா

இந்தியா-புலிகள் யுத்தத்திற்கு புலிகளின் வன்முறைதான் காரணமா

உண்ணாவிரத போராட்டம்

மேலும், ஈரோஸ் அமைப்பின் வி. பாலகுமார், டெலோஅமைப்பின் ஏ. செல்வம், புளொட் அமைப்பின் எஸ். ஸ்கந்தா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேலும், EPRLF தலைவர் பத்மநாபா மற்றும் புளொட் தலைவர் உமா மகேஸ்வரன் அப்போது டெல்லியில் இருந்ததால் கைது செய்யப்பட்டவில்லை.

40 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகளிடம் கடுமையாக நடந்துகொண்ட எம்.ஜி.ஆர் அரசு | 40 Years Mgr Government Was Harsh Towards The Ltt

இவர்கள் அனைவரும் அந்த ஆண்டு நவம்பர் 14-ஆம் திகதி காலை வரை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அந்த ஆண்டு பெங்களூருவில் நடைபெறவிருந்த சார்க் மாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அப்போதைய காவல்துறை இயக்குநர் கே. மோகன்தாஸ் தனது "MGR: The Man and The Myth (1992)" நூலில், பெங்களூரு மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனே பங்கேற்கவுள்ளதைப் பிரதமர் ராஜீவ் காந்தி எம்.ஜி.ஆரிடம் தெரிவித்ததாகவும், எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட ஆலோசனையின் பேரிலேயே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் முன் அனுமதி பெறப்படவில்லை என்றாலும், மத்திய அரசும் இதில் தலையிடவில்லை எனவும் அவர் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் காவல்துறையின் இந்தக் நடவடிக்கைகளையும், தகவல் தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதையும் கண்டித்து விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

உண்ணாவிரதம் தொடங்கிய இரண்டு நாட்களில், கோவையில் இருந்த எம்.ஜி.ஆர் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் தொடர்பு சாதனங்களைத் திருப்பித் தருமாறு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, தன் மீதான காவல்துறை கண்காணிப்பு விலக்கிக் கொள்ளப்படும் என்ற அரசின் உறுதிமொழியைத் தொடர்ந்து, 1986 நவம்பர் 24-ஆம் திகதி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி முன்னிலையில் பிரபாகரன் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளார்.

தலைமைத்துவ வெற்றிடத்தில் தடுமாறும் தமிழர் அரசியல்

தலைமைத்துவ வெற்றிடத்தில் தடுமாறும் தமிழர் அரசியல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
நன்றி நவிலல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026