வெள்ளத்தால் அழிவடைந்த ரூபா 400 கோடி
கொட்டித் தீர்த்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் வங்கிக்குள் புகுந்ததால் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூபா 400 கோடி தண்ணீரில் மூழ்கி வீணாகிப்போனது.
இந்த சம்பவம் இந்தியாவின் மாகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
கொட்டி தீர்த்த மழை
குறித்த பகுதியில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி தீர்த்தது.இதனால் வீடுகள், அலுவலகங்களில் மழை நீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், நாக்பூரின் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள மகாராஷ்டிரா வங்கிக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.இதனால் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூபா 400 கோடி சேதமடைந்தது.
வங்கிக்குள் வெள்ளம் புகுந்ததால்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சேதமடைந்த ரூபா நோட்டுகளை பார்வையிட்டு அவற்றை ஸ்கான் செய்து கணக்கில் எடுத்துக்கொண்டனர். பின்னர் சேதமடைந்த ரூபா நோட்டுகளுக்கு மாற்று ரூபா நோட்டுகளை வழங்கினர்.

மேலும், வெள்ளத்தால் ரூபா நோட்டுகள் சேதமானால் அந்த பணத்துக்கான இழப்பை வங்கி நிர்வாகம் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 6 மணி நேரம் முன்