அர்ச்சுனா கைதும் பிக்குகளின் போதை கடத்தலும் - உள்ளுரில் காவி! தாய்லாந்தில் மது-மாது காலிகள்
நரிக்கு நாட்டாண்மை கொடுத்தால் அது கிடைக்கு இரண்டு வெள்ளாடுகள் கேட்குமாம் என ஒருபழமொழி உள்ள பின்னணியில் நேற்று முன்தினம் தன்னுடன் முரண்பட்ட சாமானியருக்கு துப்பாக்கியை காட்டி மிரட்டிய வடக்கின் கிளாடியேற்றர் எம்.பி இன்று கைதுசெய்யப்பட்டார் என்ற செய்தி பரபரவென பற்றியது.
இந்த கிளாடியேற்றர் எம்பி துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய காட்சி சமுகவலைத்தளங்களில் பரவிஅதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கைது, துப்பாக்கிபறிப்பு நீதிமன்றத்தில் முன்னிலை என பரபரப்புகள் வந்தன.
எம்பியின் இந்த கைது சிறிலங்கா காவற்துறையால் உடனடியாக நாடாளுமன்ற சபாநாயகருக்கும் அறிவிக்கபட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே இந்த கிளாடியேற்றர் எம்.பியால் மிரட்டலுக்கு உள்ளானதாக கருதப்படும் குடும்பப் பெண்ணும் தனது ஒரு வயது குழந்தையுடன் தடுப்புகாவலில் உள்ளார் இன்னொருவர் எம்பியால் தாக்கப்பட்டதாக கூறி சிகிச்சையில் உள்ளார்.
வடக்கின் இந்த கிளாடியேற்றர் சங்கதிகளை தூக்கிச்சாப்பிடும் அளவுக்கு போதைப்பொருள் கடத்தலில் சிறிலங்காவின் 22 இளம்பிக்குகள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இப்படிமாட்டுப்பட்ட செய்திகள் உள்ளன.
வடக்கின் நாவற்குழிப்பகுதியில் ஒரு தமிழ் சிறுமி மீது பாலியல் துன்புறுத்தலை செய்த பிக்குவுக்கு தென்னிலங்கைன பிக்குகள் வக்காலத்து வாங்கி ஓய்வதற்கு இடையில் கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் ஒரே நேரத்தில் பிடிபட்ட மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் என்ற புதிய பதிவை இந்த 22 காவிஉடைகளும் ஏற்படுத்தியுள்ளனர்.
இவர்களின் தாய்லாந்து மது -மாது கூத்தடிப்பு ஆதாரங்கள் அதிர்ச்சிகரமாக வெளிவந்த நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு…
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 3 மணி நேரம் முன்